தமிழர்களின் பாரம்பரிய நடனங்கள்.

பரத நாட்டியம்

இன்று பரத நாட்டியம் என அழைக்கப்பட்டாலும் ஆரம்பக்காலங்களில் சதிராட்டம் என்றே அழைக்கப்பட்டது. சதிராட்டத்துக்கு திரு.கிருஸ்ணையர் அவர்கள் தான் 1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார்.

புலியாட்டம்

புலி போன்று வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலிபோல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவைஅணிவர். காலில் சலங்கையும் கட்டுவர். புலி ஆட்டத்தை ஒத்து கரடிஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்கள் உண்டு.

மயிலாட்டம்

இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும்விரித்தும்ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தைஅல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். இது தமிழரின் நாட்டார் ஆடற் கலையாகும்.

பொய்க்கால் குதிரை ஆட்டம்

குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்துஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசாஇராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு. மேலும் கால்களில் உயரமான தடிகளைக் கட்டிக் கொண்டும் ஆடப்படிகின்றது.

கரகாட்டம்

தலையில் பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை வைத்தபடி, சமநிலை பேணிஆடும் இது பாரம்பிய ஆட்டங்களில் ஒன்றாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பறை ஆட்டம்

பறையாட்டம் உணர்ச்சி மற்றும் எழுச்சி மிக்கது. இதுவும் தமிழரின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாகும். அதாவது தோலால் உருவாக்கப்பட்ட பறையை கொண்டு இசையை உருவாக்கி அவ்வோசைக்கேற்ப ஆடப்படும் ஆட்டமே பறையாட்டம் எனப்படுகின்றது. பறையைவிட அதிர்வு குறைந்தமெல்லிய இசைக்கருவிகளுக்கேற்ப பறையாட்டத்தின் வீரியமிக்கஅசைவுகளை கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்ட நடனமே “சதிராட்டம்”.

தேவராட்டம்

தலைப்பில் தலைப்பா கட்டி, இடுப்பில்துண்டு கட்டி ஆடுவர். உருமி மேளம், பறை மேளம் ஆகியவைதேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைகளாக இருக்கின்றன. இது தேவர், கம்பளத்து நாயக்கர் எனும் சமூகத்தினரின் கோவில் விழாக்களிலும், வீட்டுவிழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இதை ஒருசடங்காகவே வைத்திருக்கின்றனர்.

காவடி

முருகப்பெருமானை துதிக்கும் பக்தர்களால் முறைப்படி அழகாக வில் வடிவில் அமைக்கப்பட்ட ஒருவகை பொருளாகும். இதனை தலையில் சுமந்து ஆடும் ஆட்டமே காவடி எனப்படுகின்றது.

 

 

 

Photos By Deepak Kumar FB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *