Category Archives: Accident

Accident Near Vattakottai in kanyakumari District

கன்னியாகுமரி மாவட்டம் வட்ட கோட்டை சந்திப்பு நான்கு வழி சாலையில் Rohini College of Engineering & Technology கல்லூரி வாகனமும் , டெம்போவும் மோதியது.

accident near vattakottai

 

Rohini College Bus accident

Rohini College Bus accident

Rohini College Bus accident

Rohini College Bus accident

Accident Near aralvaimozhi in Kanyakumari district

நாகர்கோவில் அடுத்த ஆரால் வாய்மொழியில் சொகுசு கார் மற்றும் பால் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதல் காரில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலி 3 பேர் கவலைக்கிடமாக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

aralvaimozhi-accident

aralvaimozhi-accident2

 

aralvaimozhi-accident4

One die in bus Accident near kulasekaram

Arunachala college bus accident

குமரி மாவட்டம் குலசேகரம் கல்லடிமாமூட்டில் காலை 8.15 மணி அளவில் நடந்த விபத்தில் புத்தன் கடையை சார்ந்த டிக் ஷன்ராஜ் என்ற இளைஞர் படுகாயமடைந்தார் அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய அருணாச்சலா வெள்ளிச் சந்தை கல்லூரி வாகனம் காவல்துறையினரால் மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில் பள்ளி கல்லூரி வாகனங்கள் அதிவேகமாக செல்வதே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.

அதுமட்டுமில்லாது இந்த #அருணாச்சலா கல்லூரி வாகனம் ஏற்படுத்திய இரண்டாவது விபத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அதிகாலையில் நடந்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Arunachala college bus accident near kulasekaram in second time. Before Mother and daughter injured in same Arunachala college bus.

Arunachala college bus accident1

Accident near manakudi one killed in st johns college bus

18010860_1845423819116506_5828724298244597075_n

நேற்று மாலை மணக்குடி பாலம் செல்லும் வழியில் புனித ஜாண்ஸ் கலைகல்லூரி பேருந்து அதிவேகமாக வந்த வேளையில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து எதிர்முனை வளைவிலே வந்த நபரை தடத்திலே காலியாக்கியது. இதை வெளியில் வந்தால் கல்லூரி பெயருக்கு களங்கம் என மீடியா துறைக்கு ஒரு தொகையும்,வழக்கு போடாமல் இறந்த குடும்பத்திற்கு ஒரு தொகையும் செலுத்தி மறைத்துவிட்டனர். இறந்தவரின் குடும்பமோ மிக ஏழ்மை நிலை அன்றாட செலவிற்கு நடைபெறும் குடும்பம் குழந்தைகள் படிக்க கூட வழியில்லாத நிலை வேககட்டுப்பாட்டு கருவியை பொருத்தி வாகனத்தை அரசு அனுமதி பெற்றபின் அதை துண்டித்து வேகமாக பயன்படுத்தும் டிரைவர்கள் கண்டுகொள்ளாத அரசு,மறைக்க பேரம் பேசும் கல்லூரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிகம் அதை விட விபத்து நடந்து இறந்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை பணத்திற்கு விலை போகும் இந்த தமிழ்நாட்டை முகநூல் நண்பர்கள் பகிர்ந்து இவர்களின் கேவல செயல்களை கொஞ்சம் தட்டி கேளுங்கள் ஆர்.டி.ஒ கல்லூரி வாகனங்களை வெளித்தோற்றம் கண்டு அனுமதிக்காமல் ஆய்வு செய்து அனுமதிக்க,
மனிதன் இறந்தாலும் பரவாயில்லை கல்லூரி பெயரில் அக்கரை கொண்ட சுயநலமற்ற தன்னலவாதிகளை வருமானவரி சோதனைக்கு உட்படுத்தாமல் கருப்புபணமில்லா தமிழ்நாடும் பிறக்காது,இந்தியாவும் இருக்காது.

Source : Merlin Jacky fb

 

 

17991839_1845423812449840_6056470886623981848_n

Man killed by electricity while repairing AC for Raymond Showroom near nagercoil

நாகர்கோவில் அருகே ரேமண்ட் துணிக்கடையில் குளிரூட்டும் எந்திரத்தை சரிபார்த்துக்கொண்டிருந்த கேரளா மாநிலத்தைச்சேர்ந்த வாலிபர் முருகன் மின்சாரம் தாக்கி பலி நேசமணிபோலிசார் விசாரணை.

18011177_788283271334948_1109993328119338374_n

 

18010910_788283298001612_7682154495822507063_n

Accident near Thuckalay : 3 year old girl & driver’s death

Ambulance-near-Nagercoil-accident

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் தக்கலை அரசு மருத்துவமனை அருகே பனவிளையைச் சேர்ந்தவர் அபுஜாசிம் (வயது 33). இவர் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஐஷா பேகம் (29). இவர்களுக்கு அர்ஷியா ஜஸ்னா (3), அல்பிஷா எஸ்னா (1½) என்ற பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்தநிலையில் அர்ஷியா ஜஸ்னா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாள். இதையடுத்து அவளுக்கு நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது, ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் குழந்தைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஆம்புலன்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு ஸ்கேன் எடுக்கச் சென்றனர்.

சிறுமி–டிரைவர் சாவு

ஆம்புலன்ஸில் சிறுமி அர்ஷியா ஜஸ்னாவுடன், அவளுடைய தந்தை அபுஜாசிம், ஆஸ்பத்திரி நர்சான ஆரல்வாய்மொழி பொய்கை நகரைச் சேர்ந்த ஏஞ்சல் கிறிஸ்டி (22) ஆகியோரும் சென்றனர். ஆம்புலன்சை சுசீந்திரம் அருகில் உள்ள நல்லூர் இளையநயினார் குளத்தைச் சேர்ந்த பெனிக்ஸ்பாபு (23) என்பவர் ஓட்டினார். சிறுமிக்கு ஸ்கேன் எடுத்தபிறகு, ஸ்கேன் அறிக்கையை காண்பிப்பதற்காக அதே ஆம்புலன்சில் அவர்கள் வெள்ளமடத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ் தேரேகால்புதூர் அருகே ஒரு பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்புலன்சை ஓட்டிய டிரைவர் பெனிக்ஸ்பாபு, சிறுமி அர்ஷியா ஜஸ்னா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர். மேலும் சிறுமியின் தந்தை அபுஜாசிம், நர்ஸ் ஏஞ்சல் கிறிஸ்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

சோகம்

விபத்து நடந்ததும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி, சப்–இன்ஸ்பெக்டர் ஞானதாஸ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சசிதரன், மோகன்குமார், மணிவண்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விபத்தில் இறந்த சிறுமி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார், டிப்பர் லாரியின் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகில் உள்ள பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது விபத்து நடந்த பகுதி, அடிக்கடி விபத்து நடைபெறக்கூடிய பகுதி என போலீசாரால் கண்டறியப்பட்டு ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய பிரதிபலிப்பு விளக்குகள் அமைக்கப்பட்ட பகுதியாகும். இருப்பினும் அதே இடத்தில் நேற்று நடந்த விபத்தில் 2 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

 

Source Dailythanthi

Another accident in Thuckalay killed one in Car – Mini Bus Collision

Accident in Thuckalay

 

After the very sorrowful incident of 5 College students (Ayyappa College for Women) killed in an accident last week in thuckalay nagercoil, another accident in took place today killed one person in a Car – Mini Bus Collision. Below accident photos from the spot

தக்கலை அருகே மினி பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிவி காமெடி நடிகர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். வங்கி ஊழியர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவனந்தபுரம் அருகே உள்ளது பேயாடு செறுவாறை மகாவிஷ்ணு கோயில். இந்த கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு தேவையான பூக்களை வாங்குவதற்காக கோயில் நிர்வாகிகள் காரில் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு வந்தனர். அங்கு தேவையான பூக்களை வாங்கினர்.  அவற்றை கொண்டு செல்வதற்காக மற்றொரு காரில் செறுவாறை பேயாடு பகுதியை சேர்ந்த அனிஷ்குமார் (31), குமார் (21) ஆகியோரும் வந்தனர். காரை அனிஷ்குமார் ஓட்டினார். பூக்களுடன் அவர்கள் திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களது காருக்கு பின்னால் கோயில் நிர்வாகிகளின் கார் சென்றது. நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் தக்கலை பஸ் நிலையம் அருகே ஆர்டிஓ அலுவலக பகுதியில் வரும்போது அழகியமண்டபத்தில் இருந்து தக்கலை பஸ் நிலையம் நோக்கி வந்த மினி பஸ்சும்- பூக்களுடன் சென்ற காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி அனிஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரை அந்த பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து நடந்ததும் மினிபஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மினிபஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தக்கலை தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த அனிஷ்குமார் உடலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பல முயற்சிகள் செய்தும் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் நொறுங்கி கிடந்த காரை முன்னும் பின்னுமாக 2 வாகனங்களில் கட்டி இழுத்து,  உடலை மீட்டு தக்கலை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மினிபஸ் டிரைவர் குமாரபுரம் புளியறைவிளையை சேர்ந்த ஜஸ்டின் கிறிஸ்டோபர்(40) மீது தக்கலை போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த அனிஷ்குமார் ஒரு சமையல் கலைஞர் மற்றும் மிமிக்ரி கலைஞர். மலையாள டிவி காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குமார் ஒரு தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இருவரும் கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். விபத்தில் சிக்கி டிவி காமெடி கலைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Thuckalay Accidient

 

accident in Thuckalay

accident near nagercoil

accident in Thuckalay kanyakumari district

5 College Students Killed in accident near Nagercoil

17457909_275643329530610_4009677207542899066_n

Ayyappa college Students killed in road accident

 

வேன் புலியூா்குறிச்சி என்ற இடத்தில் டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக வேகமாக வந்த வேன் கட்டுபாட்டை இழந்து திடீரென்று எதிரே வந்த கேரளா லாரி மீது வேகமாக மோதியது.
இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியதில் வேனில் இருந்த மாணவிகள் அன்பரசி, லீனா, ஷகீனா, சிவரஞ்சனி ஆகிய நான்கு போ் வேனுக்குள்ளே உடல் சிதைந்து பிணமானார்கள். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
விபத்து நடந்த சம்பவத்தை அறிந்து மற்ற மாணவிகளும் இறந்து போன மாணவிகளின் உறவினா்களும் சம்பவ இடத்தில் வந்து கதறி அழுதனா்.



17498731_1852425731638486_8779259093089092789_n

 

17458220_275643349530608_4407176082348485603_n

 

17342810_275643489530594_6465173394224844808_n

 

17457329_275643379530605_5574775276084619799_n

17498885_979831305486546_6003862578829658448_n

nagercoil accident