Category Archives: Latest News

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலை வாயுடன் அபூர்வ வகை குளத்து மீன்

kanyakumar-fishகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு கோணம் என்னும் ஊரில் உள்ள குளத்தில் சில நபர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வலையில் பிடிப்பட்ட அபூர்வ மீன் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மீனின் தலை பகுதி முதலை வாய் போலவும், உடல் பகுதி மீன் போலவும் அமைந்திருந்தது. இம்மீனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

இது குறித்து மீன்வள ஆர்வலர்கள் கூறுகையில், ‘இது முதலைக்கும் மீனுக்கும் பிறந்ததாக இருக்கலாம்’ என்று கருதுகின்றனர்.

பாம்பு வகை மீன்கள் உள்ள நிலையில் முதலை வகை மீன்கள் உருவாகியிருப்பது மக்களை  வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Colachel Port to Compete Colmbo Port

சர்வதேச அளவில், கொழும்பு துறைமுகத்திற்கு போட்டியாக, குளச்சல் துறைமுகத்தை உருவாக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மாநில அரசு போக்கு காட்டி வருவதோடு, மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பழமையான இயற்கை துறைமுகமாக, குமரி மாவட்டத்தில் உள்ள, குளச்சல் துறைமுகம் உள்ளது. நீண்ட காலமாகவே, இந்தத் துறைமுகம் முக்கியத்துவம் இழந்து காணப்படுகிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் உகந்ததாகவும், குமரியை, நாட்டின் முதல்நிலை மாவட்டமாக மாற்றவும், குளச்சல் துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மாற்றவும், மத்திய அரசு முயற்சித்து வருகிறது.’அடுத்த ஆண்டு முதல், குளச்சலில் வர்த்தக துறைமுகம் செயல்படும்’ என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, மத்திய அரசு, மாநில அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. ‘நிலப்பரப்பில், ஒரு சதுர அடி கூட வேண்டாம்; கடல் பகுதியிலேயே துறைமுகத்தை அமைக்க முடியும்’ என, மாநில அரசிடம் தெரிவித்துள்ளது.

குளச்சல் துறைமுகத்தின் சாத்தியக்கூறுகளை கண்டறிய, இரண்டு தனியார் நிறுவனங்கள், மார்ச்சில் ஆய்வு நடத்தின. குளச்சல் கடற்கரையில் இருந்து, 2 கி.மீ., நீளத்துக்கு பாலம் அமைத்து, நடுக்கடலில், 900 ஏக்கர் பரப்பளவில், செயற்கை நிலத்திட்டையை உருவாக்கி, சிங்கப்பூர் தொழில்நுட்பம் போன்று, கப்பல்களை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்கள், குளச்சல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்ரிக்காவுக்கும் சரக்குகளை கப்பலில் ஏற்றிச் செல்ல முடியும். இதன் மூலம் சர்வதேச அளவில் சரக்குகளைக் கையாளுவதில் முன்னணியில் உள்ள கொழும்புவை, இந்தியா முந்த அதிக வாய்ப்புள்ளது.

குளச்சலில் துறைமுகம் அமைந்தால், அப்பெருமை தமிழகத்தைச் சேரும். இதனால், கன்னியாகுமரி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களும் வளர்ச்சி பெறும் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கிடையில், குமரி மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் துறைமுகம், மீன் பதனிடும் நிலையம் கட்டித்தரும்படி, தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை, அனைத்து கடலோரக் கிராமங்களிலும் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, குளச்சல் துறைமுகம் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஏற்கனவே துாத்துக்குடி, விழிஞ்ஞம் வர்த்தக துறைமுகம் இருக்க, மேலும் குளச்சலையும் வர்த்தக துறைமுகமாக மாற்ற வேண்டாம் என்ற கருத்தும் நிலவுகிறது. குளச்சல் வர்த்தக துறைமுகமாக மாறினால், தங்களின் நலன் பாதிக்கும் என, மீனவர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள், மீனவர்களின் கருத்தை கேட்டு, துறைமுகத்தை அமைக்க வேண்டியது அவசியம்.

இயற்கையாகவே ஆழமானது!

குளச்சல் துறைமுக சாத்தியக்கூறு குறித்து நிபுணர்கள் கூறியதாவது:ஆசியாவிலேயே, இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் அமைந்தது குளச்சல் துறைமுகம். மற்ற இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டுமானால், 14 அடிக்கு ஆழப்படுத்த, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும்.ஆனால், குளச்சல் துறைமுகம், இயற்கையாகவே நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது. துாத்துக்குடி துறைமுகக் கடல் பகுதியை விட மிகவும் ஆழமானது. ஒரு கி.மீட்டருக்குக் குறைவான துாரத்திலேயே, 15 மீட்டர் ஆழம் உள்ளது. மேலும், குளச்சல் துறைமுகம் சர்வதேச கப்பல் வழித் தடத்திற்கு மிகவும் அருகில் உள்ளதால், கப்பல்கள் எளிதாக வந்து செல்லும். இவ்வாறு நிபுணர்கள் கூறினர்

Source: Dinamalar

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே செல்போன் கோபுரம் மீதேறி போராடிய மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் உயிரிழப்பு

மதுவிலக்கு போராளி காந்தியவாதி சசிபெருமாள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தனது போராட்டத்தின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உண்ணாமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி உண்ணாமலை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருந்தார். இப்போராட்டத்தில் மதுவிலக்கு போராளி சசிபெருமாளும் கலந்து கொள்வார் எனக் கூறியிருந்தார்.

அதன்படி சசிபெருமாள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உண்ணாமலை பகுதிக்கு வந்தர். அப்போது அவரும், ஜெயசீலனும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயசீலன் பாஜகவைச் சேர்ந்தவர். அவர் செல்போன் கோபுரத்தின் பாதி வழியில் அமர்ந்து கொண்டார். சசி பெருமாள் கோபுரத்தின் உச்சிப் பகுதிக்கே ஏறிவிட்டார்.

தகவலறிந்து, சுமார் 8.30 மணியளவில், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் முத்து, தக்கலே டிஎஸ்பி விக்ராந்த் பாட்டீல், வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தடைந்தனர். ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் வரவிலை.

சசிபெருமாள் போராட்டத்தை துவங்கி 5 மணி நேரத்துக்குப் பின்னர் டாஸ்மாக் உயரதிகாரி அங்கு வந்துள்ளார். டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் உண்ணாமலை பகுதியில் இருந்து ஏற்கெனவே கடையை அகற்றுவதாக எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுவிட்டது என்றனர். உண்ணாமலை பகுதியில் இருந்து டாஸ்மாக் கடை மூடப்படும் என மீண்டும் உறுதியளித்துள்ளனர்.

அதன்பின்னர் செல்போன் கோபுரத்திலிருந்து அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன.

மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சசிபெருமாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சசிபெருமாள் திடீர் மரணத்துக்கு அவரது ரத்த அழுத்தம் அதிகரித்ததுகூட காரணமாக இருக்கலாம். இருப்பினும், உறுதியான தகவல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியும் என மருத்துவர்கள் கூறினர்.

சசிபெருமாள் மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். கடந்த 2014 ஆண்டு அவர் தொடர்ந்து 34 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பூரண மதுவிலக்கு கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டம் நடத்தியிருக்கிறார்.

Source : The Hindu

Extensive rain in Kanyakumari District affects Normal Life

Widespread rain and downpour in many parts of Kanyakumari district affected normal life as many low-lying areas were inundated.

The PWD officials are closely monitoring the situation as the two major reservoirs in the district are getting a steady inflow. A flood warning looked imminent. Perunchani recorded a rainfall of 1.2 cm in the last 24 hours ending at 8 a.m. on Sunday.

Sea erosion and incursion were reported in coastal villages near Thengaipattinam, Azhikal, Pillaithope, Midalam, Kurumparai and Colachel two days ago. Now, the continuous rain not only hit the routine, but also resulted in traffic jams on many stretches. Production was suspended in salt pans and brick kilns.

Public Works Department officials said that storage level in Pechiparai dam was 45.73 ft (full level is 48 ft), with an inflow of 2,651 cusecs. In Perunchani, the storage level was 75 ft (77 ft), with an inflow of 2,107 cusecs and discharge of 2,845 cusecs. As much as 537 cusecs was discharged from Chittar dam.

With intermittent rain continuing in the district, officials have cautioned the people living near riverbanks to move to safer places. In low-lying areas, transport was cut off and roads had been badly damaged.

The worst-affected were faresrmers in the district as many had just sown seeds in their fields. The rains had washed away seeds sown in close to 100 hecta.

In Alamparai, a long stretch of 200 feet road was not severely damaged. Over 30 dwellings suffered damage in the rain in Samiathope. Officials maintained that there was no casualty, and the residents had been moved to safety.

Boat service suspended

For the third consecutive day, boat service to Thiruvalluvar statue in Kanyakumari remained suspended due to heavy wind accompanied by rain, the officials said. Triveni Sangamam, Sunset Park and Vivekanandar Memorial witnessed a huge turnout of tourists.

Source: The Hindu

Rain and Drizzle expected to be continue in Kanyakumari District

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளம் பொங்கிப் பாய்ந்தது.

சாரல் மழை

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடைவெயில் தெரியாத அளவுக்கு அவ்வப்போது மழை பெய்து மண்ணை குளிர வைத்து விட்டது. இடை இடையே இடியுடன் கனமழை பெய்ததால் அணைகளும் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2 வாரமாக வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சாரல்மழை இதமாக பெய்கிறது. சாரல்மழை நேற்றும் பல இடங்களில் பெய்தது. சில இடங்களில் சற்று பலமாக மழை பெய்தது.

கோழிப்போர்விளையில் அதிகம்பேச்சிப்பாறை-10.2, பெருஞ்சாணி-16.2, சிற்றார் (1) – 18.2, சிற்றார் (2) – 11.6, பொய்கை-5.4, மாம்பழத்துறையாறு-20, இரணியல்-4.2, ஆனைக்கிடங்கு-18, குளச்சல்-10, குருந்தன்கோடு-23.6, அடையாமடை-13, கோழிப்போர்விளை-40.5, முள்ளங்கினாவிளை-38, புத்தன்அணை-15.4, திற்பரப்பு-24, நாகர்கோவில்-14.8, பூதப்பாண்டி-1.5, சுருளோடு-13, பாலமோர்-6.5, மயிலாடி-10.2, கொட்டாரம்-20.2.மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 40.5 மி.மீட்டரும், அதற்கு அடுத்தபடியாக முள்ளங்கினாவிளையில் 38 மி.மீ., திற்பரப்பில் 24 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.



திற்பரப்பில் வெள்ளம்

மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நேற்று வினாடிக்கு 246 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 131 கனஅடியும், சிற்றார் (1) அணைக்கு 100 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 10 கனஅடியும் தண்ணீர் வந்தது. பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து 216 கனஅடியும், பெருஞ்சாணி மற்றும் சிற்றார் (1) அணைகளில் இருந்து தலா 100 கனஅடியும் தண்ணீர் வெளியேறியது. மாம்பழத்துறையாறு அணைக்கு வந்த 10 கனஅடி நீர் உபரிநீராக திறந்து விடப்பட்டது.

திற்பரப்பு பகுதியில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் நகர தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Nagercoil :நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நகர தெருக்களிலும் பிளாட்பாரங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவின்பேரில், நகரசபை கமிஷனர் ராமமூர்த்தி ஆலோசனைப்படி நகரமைப்பு அதிகாரி கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் கெபின்ஜாய், துர்காதேவி, சந்தோஷ்குமார், மகேஸ்வரி மற்றும் ஊழியர்கள் நேற்று, நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்புடன்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஆனைப்பாலம் கரியமாணிக்கபுரம் பகுதியில் நடந்தபோது ரோட்டோரம் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் வடிவீஸ்வரம் பெருமாள்கோவில் தெரு, ஆசாரிமார் வடக்குத்தெரு, வடசேரி குன்னுவிளை, காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஊழியர்களின் துணையோடு ராட்சத எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காமாட்சி அம்மன் கோவில் தெருவில் ஒரு பெட்டிக்கடை முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது. ஏதும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

நகரில் இதுபோல ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்களே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source : Dinathanthi

‘Nethili Fish’ dried and salted in Colachel by Fisherman’s

குளச்சல் (Colachel) மீனவர்களின் வலைகளில் அதிகமாக நெத்தலி மீன் கிடைத்தும், அதற்கான விலை போகாததால், கடற்கரை மணல் பரப்பில் நெத்தலி மீன்கள் உலரவைக்கப்பட்டு கருவாடாக்கப்படுகிறது.

நெத்தலி மீன்

குளச்சல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. விசைப்படகு மூலம் மீன் பிடிப்பது வருகிற 15–ந்தேதியுடன் முடைவடைய இருப்பதாகவும், அதன்பிறகு 45 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைக்காலமாகும்.

கடந்த சில மாதங்களாக நெத்தலி மீன் சீசன் காலமாகும். கடலில் கட்டுமரம் மற்றும் பைபர் வள்ளத்தில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் நெத்தலி மீன்களை ஏராளமாக பிடித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதிகளான கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, குறும்பனை, வாணியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்தன. அவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் குறைந்த விலைக்கே ஏலம் எடுத்து சென்றனர். மீனவர்களின் வலையில் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்த போதிலும் அவை எதிர்பார்த்த விலைக்கு போகவில்லை. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கருவாடாகிறது

இதைத்தொடர்ந்து மீனவர்களிடம் தேங்கிய நெத்தலி மீன்களை, குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவ பெண்கள் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தனர். பின்னர் அவற்றை கருவாடாக்க குளச்சல் கடற்கரை மணற்பரப்பில் உலர வைத்து உள்ளனர். கடலில் நெத்தலி மீன்கள் அதிக அளவில் கிடைத்தும் விலை போகாததால் தற்போது கருவாடாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலர வைத்துள்ள மீன்கள் கருவாடானதும் அவற்றை பெண்கள் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள். அந்த வியாபாரிகள் அவற்றை வாங்கி தூத்துக்குடி, திருச்சி, கோவில்பட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

Source : Dinathanthi

Pon Radhakrishnan – இந்து மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

இந்து மாணவர்கள்  கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து  வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆய்வு

மார்த்தாண்டத்தை (Marthandam)  அடுத்த பயணம் – திக்குறிச்சி ஆற்று இணைப்புபாலம் ரூ. 5½ கோடி செலவில் புதிதாக அமைக்கப் படுகிறது.  இதன் இறுதிகட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாலம் பணியை ஆய்வு செய்தார்.

அந்த இணைப்பு பாலத்தின் அருகில்,  2–வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவில் உள்ளது.  பாலம் கட்டும் பணி நடந்த போது ஆற்று தண்ணீர், கோவிலின் உள்ளே புகாமல் இருப்பதற்கு வைக்கப் பட்டிருந்த தடுப்பு கற்கள் அகற்றப்பட்டது.  இதனால், ஆற்று வெள்ளம் சிவாலய சுவற்றில் மோதி, சுவர் சேதமடைந்துள்ளது.

இந்தநிலையில், பாலம் பணியை பார்வையிட வந்த மத்திய மந்திரியிடம்,  கோவிலை பாதுகாக்கும் வகையில்  தடுப்புசுவர் கட்டவும்,   சிவாலய  ஓட்டம் நடைபெறும் போது புனிதநீராடுவதற்கு வசதியாக படித்துறை அமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.   இதற்கு மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவித்தார்.

கல்வி உதவித்தொகை

காங்கிரஸ் கட்சி, இந்து மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்காக ஜூலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். காங்கிரசார்,  தங்களின் கட்சியை சேர்ந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்து கூறி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுவதற்கு வலியுறுத்த வேண்டும். இந்து மாணவர்கள்  கல்வி உதவித் தொகைக்காக மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இவ்வாறு அவர் தெரிவித் தார்.

Pon Radhakrishnan

Source : Dinathanthi

கன்னியாகுமரியில் இருந்து, கேரளாவுக்கு வந்துகொண்டிருந்த காய்கறிகளுக்கு, கேரளா தடை

Nagercoil :

கன்னியாகுமரியில் (Kanyakumari) இருந்து, கேரளாவுக்கு வந்துகொண்டிருந்த காய்கறிகளுக்கு, கேரளா தடைவிதித்து விட்டது. மேலும், ஒட்டுமொத்தமாக, தமிழக காய்கறிகளுக்கு தடை விதிப்பது குறித்தும், கேரளா ஆலோசித்து வருகிறது.மத்திய அரசிடம் புகார்:இந்நிலையில், தமிழக காய்கறிகள், விஷத்தன்மை வாய்ந்தாக உள்ளது என்றும், அதிகளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, தமிழகத்தில், காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், கேரளா புகார் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது’ என, டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், கேரளா புகார் கூறி உள்ளது.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ரசாயன உரத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாக, கேரள அரசு கூறி வருகிறது.இதனால், தமிழக காய்கறிகள் உற்பத்தியாகும் இடங்களில், கேரள தோட்டக்கலைத் துறையினர், கடந்த மாதம் ஆய்வு நடத்தினர்.பின், அக்கு-ழு அளித்த அறிக்கையின்படி, கேரள உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அனுபமா,தமிழக வேளாண் உற்பத்தித்துறை கமிஷனர் ராஜேஷ் லக்கானிக்கு கடி-தம் எழுதினார்.அதில், ‘பூச்சிக்கொல்லி மருந்துக-ளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தாத பட்சத்தில், இருமாநில மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்’ என கூறியிருந்தார்.

பேச்சிப்பாறை(Pechiparai) அணைத்தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டது

பாசனத்துக்காக திறக்கப்பட்ட பேச்சிப்பாறை அணைத்தண்ணீர் தோவாளை சானலுக்கு வந்து சேர்ந்தது. 216 கனஅடி திறப்பு குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் ஆகிய அணைகள் உள்ளன. இதில் முக்கடல் அணையைத்தவிர மற்ற அணைகள் அனைத்தும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) கட்டுப்பாட்டிலும், குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் முக்கடல் அணை நாகர்கோவில் நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் பாசனத்துக்காக ஜூன் மாதம் திறக்கப்பட்டு, பிப்ரவரி மாத இறுதியில் மூடப்படுவது வழக்கம். இந்தநிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. கோடை மழை தொடர்ந்து பெய்ததின் காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 40.58 அடியாக இருந்தது. முதல்நாளான நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று கூடுதலாக 16 கன அடி தண்ணீர், அதாவது 216 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

விவசாயிகள் மும்முரம் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் தோவாளை சானல் தொடங்கும் பகுதியான செல்லந்துருத்தியை தாண்டி காட்டுப்புதூருக்கு வந்தது. மாலையில் சீதப்பால் பகுதிக்கு வந்து சேர்ந்தது.

அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியை மேற்கொள்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் பணியை விவசாயிகள் தொடங்கினர். விரைவில் நடவுப்பணியை மேற்கொள்வார்கள் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.67 அடியாக உள்ளது. அணைக்கு 79 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சிற்றார்-1 அணை நீர்மட்டம் 17.06 அடியாகவும்,
சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 17.16 அடியாகவும்,
பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும்,
மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் முழுகொள்ளளவான 54.12 அடியாகவும் உள்ளன. இந்த அணைக்கு 4 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த 4 கன அடி தண்ணீரும் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

Source : Dinathanthi

Pechiparai Dam (Pechiparai Reservoir) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது.இது மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இவ் அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897-1906 காலக்கட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மகாராசா மூலம் திருநாள் காலத்தில் கட்டப்பட்டது.இதன் அப்போதைய கட்டுமானத்திற்காக செலவளிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இவ்வணை கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. இவ்வணை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது. கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 207.19 சதுர கிலோமீட்டர்கள் ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள்

Source : Wikipedia