Nagercoil-Thiruvanthapuram தேசிய நெஞ்சாலையில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் எந்த பாகுபாடின்றி நிவாரணம் வழங்க கோரி போராட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள்.
குமரிமாட்டத்தில் ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும்…
பலியான அனைத்து மக்களுக்கும் பாகுபாடற்ற நிவராணம் வழங்க கோரி….
தக்கலை தாலூக அலுவகலம் முன் கட்சி,மத பாகுபாடின்றி போராட்டம் நடைபெறுகிறது
குமரி மாவட்டம் தக்கலை அரசு மருத்துவமனை அருகே பனவிளையைச் சேர்ந்தவர் அபுஜாசிம் (வயது 33). இவர் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஐஷா பேகம் (29). இவர்களுக்கு அர்ஷியா ஜஸ்னா (3), அல்பிஷா எஸ்னா (1½) என்ற பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்தநிலையில் அர்ஷியா ஜஸ்னா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாள். இதையடுத்து அவளுக்கு நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது, ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் குழந்தைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஆம்புலன்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு ஸ்கேன் எடுக்கச் சென்றனர்.
சிறுமி–டிரைவர் சாவு
ஆம்புலன்ஸில் சிறுமி அர்ஷியா ஜஸ்னாவுடன், அவளுடைய தந்தை அபுஜாசிம், ஆஸ்பத்திரி நர்சான ஆரல்வாய்மொழி பொய்கை நகரைச் சேர்ந்த ஏஞ்சல் கிறிஸ்டி (22) ஆகியோரும் சென்றனர். ஆம்புலன்சை சுசீந்திரம் அருகில் உள்ள நல்லூர் இளையநயினார் குளத்தைச் சேர்ந்த பெனிக்ஸ்பாபு (23) என்பவர் ஓட்டினார். சிறுமிக்கு ஸ்கேன் எடுத்தபிறகு, ஸ்கேன் அறிக்கையை காண்பிப்பதற்காக அதே ஆம்புலன்சில் அவர்கள் வெள்ளமடத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆம்புலன்ஸ் தேரேகால்புதூர் அருகே ஒரு பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்புலன்சை ஓட்டிய டிரைவர் பெனிக்ஸ்பாபு, சிறுமி அர்ஷியா ஜஸ்னா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர். மேலும் சிறுமியின் தந்தை அபுஜாசிம், நர்ஸ் ஏஞ்சல் கிறிஸ்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சோகம்
விபத்து நடந்ததும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி, சப்–இன்ஸ்பெக்டர் ஞானதாஸ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சசிதரன், மோகன்குமார், மணிவண்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்தில் இறந்த சிறுமி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார், டிப்பர் லாரியின் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகில் உள்ள பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது விபத்து நடந்த பகுதி, அடிக்கடி விபத்து நடைபெறக்கூடிய பகுதி என போலீசாரால் கண்டறியப்பட்டு ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய பிரதிபலிப்பு விளக்குகள் அமைக்கப்பட்ட பகுதியாகும். இருப்பினும் அதே இடத்தில் நேற்று நடந்த விபத்தில் 2 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
After the very sorrowful incident of 5 College students (Ayyappa College for Women) killed in an accident last week in thuckalay nagercoil, another accident in took place today killed one person in a Car – Mini Bus Collision. Below accident photos from the spot
தக்கலை அருகே மினி பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிவி காமெடி நடிகர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். வங்கி ஊழியர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவனந்தபுரம் அருகே உள்ளது பேயாடு செறுவாறை மகாவிஷ்ணு கோயில். இந்த கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு தேவையான பூக்களை வாங்குவதற்காக கோயில் நிர்வாகிகள் காரில் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு வந்தனர். அங்கு தேவையான பூக்களை வாங்கினர். அவற்றை கொண்டு செல்வதற்காக மற்றொரு காரில் செறுவாறை பேயாடு பகுதியை சேர்ந்த அனிஷ்குமார் (31), குமார் (21) ஆகியோரும் வந்தனர். காரை அனிஷ்குமார் ஓட்டினார். பூக்களுடன் அவர்கள் திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களது காருக்கு பின்னால் கோயில் நிர்வாகிகளின் கார் சென்றது. நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் தக்கலை பஸ் நிலையம் அருகே ஆர்டிஓ அலுவலக பகுதியில் வரும்போது அழகியமண்டபத்தில் இருந்து தக்கலை பஸ் நிலையம் நோக்கி வந்த மினி பஸ்சும்- பூக்களுடன் சென்ற காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி அனிஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரை அந்த பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து நடந்ததும் மினிபஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மினிபஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தக்கலை தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த அனிஷ்குமார் உடலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பல முயற்சிகள் செய்தும் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் நொறுங்கி கிடந்த காரை முன்னும் பின்னுமாக 2 வாகனங்களில் கட்டி இழுத்து, உடலை மீட்டு தக்கலை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மினிபஸ் டிரைவர் குமாரபுரம் புளியறைவிளையை சேர்ந்த ஜஸ்டின் கிறிஸ்டோபர்(40) மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த அனிஷ்குமார் ஒரு சமையல் கலைஞர் மற்றும் மிமிக்ரி கலைஞர். மலையாள டிவி காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குமார் ஒரு தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இருவரும் கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். விபத்தில் சிக்கி டிவி காமெடி கலைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேன் புலியூா்குறிச்சி என்ற இடத்தில் டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக வேகமாக வந்த வேன் கட்டுபாட்டை இழந்து திடீரென்று எதிரே வந்த கேரளா லாரி மீது வேகமாக மோதியது.
இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியதில் வேனில் இருந்த மாணவிகள் அன்பரசி, லீனா, ஷகீனா, சிவரஞ்சனி ஆகிய நான்கு போ் வேனுக்குள்ளே உடல் சிதைந்து பிணமானார்கள். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
விபத்து நடந்த சம்பவத்தை அறிந்து மற்ற மாணவிகளும் இறந்து போன மாணவிகளின் உறவினா்களும் சம்பவ இடத்தில் வந்து கதறி அழுதனா்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள திருவிதாங்கோட்டில் தரமற்ற பொருட்கள் கொண்டு வாய்க்கால் கட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து கரைக்கண்டார்கோணம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல இந்த சிறிய வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது. இந்த வாய்க்காலை தரமான பொருட்கள் கொண்டு அமைத்துத் தர வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.