“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 2 – கன்னியாகுமரி
சத்குரு அவர்கள் பேசிய போது, “நாம் கண்களை மூடிக் கொண்டுவிட்டால், பிரச்சினை போய்விடாது. நம் உயிர் வேண்டுமானால் போகலாம், ஆனால் பிரச்சினை அவ்வாறே இருக்கும். அதை அடுத்த தலைமுறையினரின் தலையில் நாம் இறக்கிவிடுவோம். இது மிகவும் பொறுப்பற்ற செயல். பாகிஸ்தானுடன் போர் நடந்தபோதுகூட இத்தனை பேர் இறந்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 3,00,000 விவசாயிகள் – நாம் உண்ண நமக்கு உணவளித்த விவசாயிகள் – தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் உண்ண உணவின்றி, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது நமக்கு பெரிய தலைக்குனிவு. இலையும், ஆடு/மாடு சாணமும்தான் மக்கி மண்ணாகிறது. என்றோ மரமில்லாமல் செய்துவிட்டோம். இப்போது விலங்கினங்களையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். காடில்லாமல் மழையில்லை. மழையில்லாமல் தண்ணி இல்லை. இப்படி மண்ணையும் தண்ணியையும் தொலைத்துவிட்டு குழந்தைகளுக்கு எதை விட்டுச் செல்வது? இன்றே இதற்கான செயலில் இறங்கினால்தான் 15-20 வருடத்தில் பலன் கிடைக்கும்” என்றார்.