Tag Archives: chittar2

Rain and Drizzle expected to be continue in Kanyakumari District

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளம் பொங்கிப் பாய்ந்தது.

சாரல் மழை

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடைவெயில் தெரியாத அளவுக்கு அவ்வப்போது மழை பெய்து மண்ணை குளிர வைத்து விட்டது. இடை இடையே இடியுடன் கனமழை பெய்ததால் அணைகளும் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2 வாரமாக வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சாரல்மழை இதமாக பெய்கிறது. சாரல்மழை நேற்றும் பல இடங்களில் பெய்தது. சில இடங்களில் சற்று பலமாக மழை பெய்தது.

கோழிப்போர்விளையில் அதிகம்பேச்சிப்பாறை-10.2, பெருஞ்சாணி-16.2, சிற்றார் (1) – 18.2, சிற்றார் (2) – 11.6, பொய்கை-5.4, மாம்பழத்துறையாறு-20, இரணியல்-4.2, ஆனைக்கிடங்கு-18, குளச்சல்-10, குருந்தன்கோடு-23.6, அடையாமடை-13, கோழிப்போர்விளை-40.5, முள்ளங்கினாவிளை-38, புத்தன்அணை-15.4, திற்பரப்பு-24, நாகர்கோவில்-14.8, பூதப்பாண்டி-1.5, சுருளோடு-13, பாலமோர்-6.5, மயிலாடி-10.2, கொட்டாரம்-20.2.மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 40.5 மி.மீட்டரும், அதற்கு அடுத்தபடியாக முள்ளங்கினாவிளையில் 38 மி.மீ., திற்பரப்பில் 24 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.



திற்பரப்பில் வெள்ளம்

மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நேற்று வினாடிக்கு 246 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 131 கனஅடியும், சிற்றார் (1) அணைக்கு 100 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 10 கனஅடியும் தண்ணீர் வந்தது. பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து 216 கனஅடியும், பெருஞ்சாணி மற்றும் சிற்றார் (1) அணைகளில் இருந்து தலா 100 கனஅடியும் தண்ணீர் வெளியேறியது. மாம்பழத்துறையாறு அணைக்கு வந்த 10 கனஅடி நீர் உபரிநீராக திறந்து விடப்பட்டது.

திற்பரப்பு பகுதியில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தனர்.