Tag Archives: Nagercoil

பேருந்துநிலையங்களை தனியார்மயமாக்க தேவையில்லை!-வழிகாட்டும் நாகர்கோயில் நகராட்சி!

nagercoilinfo

“உள்ளாட்சி அமைப்புகள் நிதிச்சுமையில் தத்தளிப்பதால் பேருந்துநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்போகிறோம்” என்ற தமிழக அரசின் அறிவிப்பு பலத்த சர்ச்சை விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், “உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை சரிசெய்து வருமானத்தை பெருக்கினால்… அரசாங்கமே பேருந்துநிலையங்களை சிறப்பாக நடத்திட முடியும்” என்று உணர்த்தியதோடு உயர்நீதிமன்றத்தால் பாராட்டையும் பெற்றிருக்கிறது நாகர்கோயில் நகராட்சி.

“பேருந்து நிலையங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் அங்கு விற்பனை செய்யும் பொருட்களின் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி விற்பனை செய்வார்கள். பேர்ந்து நிலையத்தில் நிற்பதற்குக்கூட கட்டணம் வசூலிக்கும் அவலநிலை வரலாம். இதன்மூலம், பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்றக் குமுறல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வெடித்துக்கொண்டிருக்க, நீதிமன்றமே பாராட்டும் அளவிற்கு நாகர்கோயில் நகராட்சி அப்படியென்ன செய்திருக்கிறது?

இதுகுறித்து, சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர் பொ.சோமசுந்தரம் நம்மிடம், “உள்ளாட்சி அமைப்புகள் நிதிச்சுமையில் தத்தளிப்பதால்தான் பேருந்து நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், நாகர்கோயிலிலுள்ள பேருந்துநிலைய வருமானம் கடந்த வருடங்களைவிட இந்த வருடம் 4 மடங்காக அதிரிகரித்திருக்கிறது. இப்படி, தமிழகம் முழுக்க உள்ள பேருந்துநிலையங்களில் நியாயமான வாடகைகளை வசூலித்து வருமானத்தை பெருக்கினாலே தனியாரைவிட சிறப்பாக நடத்துவதோடு பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று ஆச்சர்யப்படுத்துகிறவர், அதுகுறித்து நம்மிடம் விளக்கினார்.

“நாகர்கோயில் நகராட்சிக்குட்பட்டு சுமார் 343 கடைகள் உள்ளன. இந்த, கடைகளை குறைந்த வாடகைக்கட்டணத்தில் வாடகைக்கு எடுத்தவர்கள் பெரும்பாலானோர் பல மடங்கு கூடுதல் கட்டணத்திற்கு உள்வாடகை விட்டுக்கொண்டிருப்பது நடைமுறையில் உள்ளது. 2018 மார்ச்-31 ந்தேதி  கடைகளின் வாடகை ஒப்பந்தம் முடிவடைவதால் மூன்று மாதத்திற்கு முன்பே அதாவது 2017  டிசம்பர்-28 ந்தேதி நகராட்சி நிர்வாகத்தால் ஏலம் அறிவிக்கப்பட்டது.

5,000 ரூபாய்க்கு கடையை வாடகைக்கு எடுத்துவிட்டு, மாதம் 2 லட்சரூபாய்வரை எல்லாம் உள்வாடகைக்கு விடுகிறார்கள். அதற்கு, நேரடியாகவே ஏலம் எடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கு வாடகை கொடுத்துவிடலாம். இதன்மூலம், உள்வாடகைக்கு இருக்கிறோம் என்ற பயமும் பதட்டமும் இல்லாமல்  உரிமையாளர்கள் என்ற எண்ணம் ஏற்படும். எப்போது, விரட்டிவிட்டு வேறு யாரையாவது கொண்டுவந்துவிடுவார்கள் என்று உள் வாடகைக்குவிட்டவர்களுக்கும் பயப்படத்தேவையில்லை.  இதைவிடக்கொடுமை, நாகர்கோயில் பேருந்துநிலையத்திலுள்ள கடைகளுக்கு முன்பு ஒருமுறை ஏலம் விடப்படப்போது, தனியார் கடைகளுக்கு 30 சதவீதம் வாடகை ஏற்றமும் போக்குவரத்துத்துறை அலுவகத்திற்கு 100 சதவீத வாடகை ஏற்றமும் இருந்ததை சுட்டிக்காட்டி போக்குவரத்துறைதான் மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கிறது அதற்கு 100 சதவீதம் வாடகையை பாகுபாடாக கூட்டியிருக்கிறீர்களே என்று உயர்நீதிமன்ற மிகுந்த வருத்தம் தெரிவித்தது.

அரசாங்கத்தின் இடத்திலேயே உள் வாடகையில் இருக்கும் கடைக்காரர்கள் கொடுக்கும் வாடகை, பேருந்துநிலையத்தில் விற்பனையில் கிடைக்கும் வருமானம் இதையெல்லாம் கருத்தில்கொண்டு கடைகளின் மாத வாடகையை  அதிரடியாக உயர்த்தி ஏலம் விட்டார்கள்.

இதனால், நாகர்கோயில் நகராட்சி கடைகள் மூலம் 1 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 144 ரூபாய் மட்டுமே வந்துகொண்டிருந்த வருட வருமானம் தற்போது 4 கோடியே 62 லட்சத்து  6 ஆயிரத்து 564 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதேபோல், கடைக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட்  தொகையும்  8 கோடியே 92 லட்சத்து  6 ஆயிரத்து 564 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

மேலும்,‘ஏற்கனவே, இருந்த கடைக்காரர்களுக்கே வாடகைக்கு விடவேண்டும். அதுவும், பழைய தொகையிலேயே வாடகைக்கு விடவேண்டும்’ என்று பழைய வாடகைக்கடைக்காரர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்கள். அப்போதுதான்,  ‘நகராட்சி நிர்வாகம் கடைகளுக்கான வாடகையை உயர்த்தியது சரியே. இந்த, நகராட்சி நிர்வாகம்போல் ஆங்காங்கேயுள்ள ஒரு சில நகராட்சி நிர்வாகங்கள் விதி விலக்குகளே’ என்று பாராட்டியதோடு நாகர்கோயில் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்து வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது” என்றார்.

நாகர்கோயில் நகராட்சிபோல உள்ளாட்சி அமைப்பிலுள்ள ஒவ்வொரு நகராட்சியும் மாநகராட்சியும் முறைகேடுகளை தடுத்து வரி, வாடகைகளை  முறையாக வசூலித்தாலே தமிழகத்திலுள்ள எந்த பேருந்துநிலையத்தையும் தனியாரிடம் தாரை வார்க்காமல் அரசாங்கமே திறம்பட நடத்தமுடியும்.

Source : https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/no-need-privatize-bus-stations-municipal-corporation-nagercoil

கன்னியாகுமரியில் ரூ.2,766 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம்; மத்திய மந்திரி நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா மார்த்தாண்டத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கின்றனர்.

மேம்பாலங்கள்

தமிழ்நாடு-கேரளா எல்லையில் காரோட்டில் இருந்து வில்லுக்குறி வரையில் 27.250 கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலையில், 4 வழிச்சாலை அமைக்கவும், வில்லுக்குறியில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரை, 42.703 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கவும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலம் கட்டவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டது.

அதேபோல திருப்பூர் முதல் அவினாசிபாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையில் 31.800 கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இதன்படி, காரோடு முதல் வில்லுக்குறி வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,274.34 கோடியும், வில்லுக்குறி முதல் கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரையிலும் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,041.98 கோடியும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு ரூ.286.95 கோடியும், திருப்பூர் முதல் அவினாசிபாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.162.72 கோடியும் ஒதுக்கி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டம் வகுத்தது.

அடிக்கல் நாட்டு விழா

இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (செவ்வாய்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு அடிக்கல் நடுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதேபோல தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் கலந்துகொள்கின்றனர்.

Source : Dinathanthi

போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் நகர தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 Encroachments removed at nagercoilஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Nagercoil :நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நகர தெருக்களிலும் பிளாட்பாரங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவின்பேரில், நகரசபை கமிஷனர் ராமமூர்த்தி ஆலோசனைப்படி நகரமைப்பு அதிகாரி கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் கெபின்ஜாய், துர்காதேவி, சந்தோஷ்குமார், மகேஸ்வரி மற்றும் ஊழியர்கள் நேற்று, நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்புடன்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஆனைப்பாலம் கரியமாணிக்கபுரம் பகுதியில் நடந்தபோது ரோட்டோரம் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் வடிவீஸ்வரம் பெருமாள்கோவில் தெரு, ஆசாரிமார் வடக்குத்தெரு, வடசேரி குன்னுவிளை, காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஊழியர்களின் துணையோடு ராட்சத எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காமாட்சி அம்மன் கோவில் தெருவில் ஒரு பெட்டிக்கடை முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது. ஏதும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

நகரில் இதுபோல ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்களே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source : Dinathanthi

Food Safety Raids on hotels and restaurants in Nagercoil

Food RideNagercoil : Food Safety officials and municipal authorities conducted a surprise raid on hotels, restaurants and roadside eateries in Meenakshipuram here on Tuesday.

The officials, headed by Deputy Food Safety Officer Salodisan, seized and destroyed food items prepared and kept in unhygienic condition.

Expired packets of food ingredients, found in the kitchens of some hotels, were destroyed.

The officials also seized food items that did not have proper labels and adulterated tea powder.

An investigation was launched to find out the origin of adulterated tea powder.

A few hotels were given two weeks’ time to improve the hygiene standard of the kitchens.

Caution notices were issued to some shops for not maintaining hygiene on their premises.

Source : The Hindu

The KanyaKumari District Six students in the state Second-ranked In SSLC

குமரி மாவட்டத்தை சேர்ந்த  6 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் 2-வது இடம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குமரி மாவட்டத்தில் 6 பேர் 498 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்துள்ளனர்

இவர்களில் 3 பேர் நாகர்கோவில் புனித அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான அனுருத்ஸ்ரீ கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ரியா வில்சன் : 498 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்த புனித அல்போன்சா பள்ளியின் மற்றொரு மாணவி ரியா வில்சன். இவரும் மாணவர் அனுருத்ஸ்ரீயைப் போல மொழிப்பாடங்களில் தலா 99, பிற பாடங்களில் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளார்

ரிட்டு ஷெரின்:  498 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்த புனித அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இன்னொரு மாணவி ரிட்டு ஷெரின் தமிழ் தவிர பிற பாடங்கள் அனைத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அபர்ணா: நாகர்கோவில் கோட்டாரில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி அபர்ணா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

லட்சுமி: நாகர்கோவில் கோட்டாரில் உள்ள டி.வி.டி. மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லட்சுமி 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

லிட்டில் ஷர்மியா: தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லிட்டில் ஷர்மியா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், குமரி மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்

nagercoil1-sslc-result nagercoil-sslc-result1

nagercoil-sslc-result2

nagercoil-sslc-result

 

நாகர்கோவில்: முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை சீர் செய்யும் சராசரி மனிதர்

Nagercoil: கொட்டும் மழை, அடிக்கின்ற வெயில் என மாறி, மாறி மிரட்டும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில், நாகர்கோவிலின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களோடு கைகோர்த்து, முழுக்க, முழுக்க சேவை மனப்பான்மையோடு போக்குவரத்தை சீர் செய்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த விஜயன் (50). அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 3 ஆண்டுகளாக என்பதுதான் ஆச்சர்யம்.

nagercoil-trafficநாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த விஜயனிடம் பேசினோம். `நாகர் கோவிலை அடுத்துள்ள சித்திரை திருமகாராஜபுரம் என்னோட சொந்த ஊரு. திருமணம் ஆகல்ல. அம்மா, அப்பா இருந்த வரைக்கும் தனியார் நிறுவன செக்யூரிட்டியா வேலை பார்த்தேன். அவங்க இறந்த பின்னாடி எனக்கு பணத் தேவை குறைஞ்சிடுச்சு.

பிழைப்புக்காக ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் ஒரு சேவை யாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். முழுசா 3 வருஷம் தாண்டிடுச்சு.

தினமும் காலையில் 8 மணிக்கு வந்துடுவேன். 11 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். பின்னர் மாலை 5 மணிக்கு வந்து விட்டு இரவு 8 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். வேப்பமூடு, கோட்டாறு, செட்டிக்குளம் பகுதிகளில் மாறி, மாறி டியூட்டி பார்ப்பேன். பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் டீ, காபி, வடைன்னு சாப்பிட ஏதாவது வாங்கித் தருவாங்க. தினமும் இரவு நாகர்கோவிலில் இருக்கும் என்னோட மாமா வீட்டுல போய் படுத்துப்பேன்.

செக்யூரிட்டியா இருக்கும் போது வாங்குன காக்கி சட்டை, பேன்டை போட்டுக்குவேன். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் நின்று கொண்டு வாகனங்களை நிறுத்தும் போது சிலர் மதித்து நடப்பர். சிலர் வித்தியாசமாக கூட பார்த்துட்டு போவாங்க.

யார் எப்படி நினைச்சாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு இந்த வேலை திருப்தியாய் இருக்கிறது” என்றவர் சாலை சீரமைப்பு பணிகளில் மூழ்கினார்.

<span style=”display:none;”>The average person will smooth traffic on the main road junctions</span>