Tag Archives: Yoga

Angamardhana – The Route to Healthy body

‘ஜிம்முக்குப் போறேன்’ என்று பலரும், equipments (உடற்பயிற்சி கருவிகள்) வாங்கி வீட்டிலேயே ப்ராக்டிஸ் பண்றேன்னு சிலரும், மூச்சு இறைக்க, நரம்பு புடைக்க உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கிறோம். ஆனால், அன்றைய யோகிகள் இது எதுவும் இல்லாமல் எப்படி தங்கள் உடலைக் கட்டுமஸ்தாக வைத்திருந்தார்கள்?! இதோ விடை சொல்ல வருகிறது ‘அங்கமர்தனா’. தொடர்ந்து படியுங்கள்!


சத்குரு:

‘அங்கமர்தனா’ என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த யோக வழிமுறை. ஆனால் இப்போது அது முற்றிலுமாக மறைந்துவிட்டது. அந்த அற்புத செயல்முறையை இப்போது ஈஷாவில் மீண்டும் கற்றுக் கொடுத்து புத்துயிரூட்டி வருகிறோம். அங்கமர்தனாவில், உங்கள் உடல் எடையையும் விசையையும் பயன்படுத்தி, சில நாட்களுக்குள் உங்கள் தசைகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறீர்கள். இது வெறும் 25 நிமிட செய்முறைதான்.

“அங்கமர்தனா” என்றால் உங்கள் உடல் அங்கங்களின் மேல் ஒரு ஆளுமை கொண்டு வருவது என்று பொருள். இந்த உலகில் நீங்கள் எந்தவொரு செயலைச் செய்தாலும், அது நீங்கள் உங்கள் உடல் அங்கங்களின் மேல் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்துதான் அந்த செயலின் வெற்றி தீர்மானிக்கப்படும். உங்களின் விடுதலைக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் விடுதலைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களின் அங்கங்களின் மேல் ஒரு ஆளுமை இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். உங்கள் அங்கங்களின் மேல் ஆளுமை என்றால், நீங்கள் ஏதோ தசை வலிமை உள்ளவராகவோ அல்லது மலை மேல் ஏறுபவராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவும் நடக்கலாம், ஆனால் அடிப்படையில், உங்கள் சக்தியின் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதுதான் இதன் நோக்கமே.

ஒரு உடற்பயிற்சி என்ற நிலையிலிருந்து பார்த்தாலும், அங்கமர்தனா ஒரு வெற்றிகரமான பயிற்சிதான். ஆனால், தசைகளை வலுவூட்டுவதும், உடலின் கொழுப்புச்சத்தை குறைப்பதும் இதன் பக்க பலன்கள் மட்டுமே. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த ஒரு சாதனா செய்தாலும், அது அங்கமர்தனாவோ அல்லது வேறு எதோவொரு சாதனாவாக இருந்தாலும் சரி, நாம் நம் சக்தி நிலையில் ஒரு குறிப்பிட்ட ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் என்பதே உண்மை.

மேலும் படிக்க…

http://tamilblog.ishafoundation.org/udalai-thangamaakkum-angamardhana/