அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம் (Toppukkaranam)

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

Thoppukaranam

* தினந்தோறும் அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டாலேகூட போதும்.

* உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்றுகொள்ளுங்கள்.

* உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும்.

* வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* அதேபோல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* பிடித்துக் கொள்ளும்போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும்
இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

* மூச்சை நன்றாக வெளியே விட்டபடி, அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து   நில்லுங்கள்.

* ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து செய்வது கடினமாக இருப்பவர்கள் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடங்கள் என படிப்படியாக அதிகரித்துக்கொள்ளுங்கள்.

…………………………………………………

மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன . நாடிகள் சுத்தம் பெறுகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர், எரிக் ராபின்ஸ் தோப்புக்கரணத்தை பற்றிச் சொல்லும்போது, “இந்த உடற்பயிற்சி மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் தூண்டப்பட்டு சக்தி பெறுகின்றன.” என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். மேலும், தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் இந்த உடற்பயிற்சியை சில நாட்கள் தொடர்ந்து செய்தபிறகு, நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாகவும் அவர் கூறுகிறார்.

அதேபோல யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர், ”தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன” என்று சொல்கிறார். ”இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன, மூளையின் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது.” எனவும்  அவர் சொல்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *