ஆய்வு
மார்த்தாண்டத்தை (Marthandam) அடுத்த பயணம் – திக்குறிச்சி ஆற்று இணைப்புபாலம் ரூ. 5½ கோடி செலவில் புதிதாக அமைக்கப் படுகிறது. இதன் இறுதிகட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாலம் பணியை ஆய்வு செய்தார்.
அந்த இணைப்பு பாலத்தின் அருகில், 2–வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவில் உள்ளது. பாலம் கட்டும் பணி நடந்த போது ஆற்று தண்ணீர், கோவிலின் உள்ளே புகாமல் இருப்பதற்கு வைக்கப் பட்டிருந்த தடுப்பு கற்கள் அகற்றப்பட்டது. இதனால், ஆற்று வெள்ளம் சிவாலய சுவற்றில் மோதி, சுவர் சேதமடைந்துள்ளது.
இந்தநிலையில், பாலம் பணியை பார்வையிட வந்த மத்திய மந்திரியிடம், கோவிலை பாதுகாக்கும் வகையில் தடுப்புசுவர் கட்டவும், சிவாலய ஓட்டம் நடைபெறும் போது புனிதநீராடுவதற்கு வசதியாக படித்துறை அமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவித்தார்.
கல்வி உதவித்தொகை
காங்கிரஸ் கட்சி, இந்து மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்காக ஜூலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். காங்கிரசார், தங்களின் கட்சியை சேர்ந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்து கூறி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுவதற்கு வலியுறுத்த வேண்டும். இந்து மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்காக மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித் தார்.
Source : Dinathanthi